தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் அம்பை வருகை

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் அம்பை வருகை
அம்பை, ஏப். 13
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகருக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் அண்ணாச்சி அ. முத்துக்குமார் வருகை தந்தார்.
அவருக்கு மகா எஜீகேஷனல் அண்ட் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகியும், பேரவை நெல்லை புறநகர் மாவட்ட செயலாளருமான டாக்டர் மூ. மகாராஜன் பொன்னாடை போர்த்தி மரியாதையுடன் வரவேற்பளித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை நெல்லை மாவட்ட தலைவர் கதிரவன் ரோச், அம்பை நகரத் தலைவர் டாக்டர் ஆர். மரகத சுப்பிரமணியன், கல்லிடை நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாச்சி அ. முத்துக்குமார், வருகிற மே 5ஆம் தேதி நடைபெறவுள்ள 43வது வணிகர் தின விழா, ‘சுதேசி 2.0’ லட்சிய மாநாடு மற்றும் அதனை ஒட்டி நடைபெறும் நிகழ்வுகள் குறித்து விரிவாக விளக்கினார்.