சேரன்மகாதேவி, ஜூன் 22:
இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சேரன்மகாதேவியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற உள்ளன.
மக்கள் நலன், சமூக நீதி மற்றும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் பொதுப்பணி மேலும் சிறக்கவும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைத்து வளங்களும் கிடைக்கவும் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மாண்புமிகு அமைச்சர் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் திரு. என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளரும் தளபதியின் உண்மைத் தொண்டருமான திரு. எச். ஜாகீர் உசேன் அவர்களின் தலைமையிலும், கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் அம்பை திரு. பாலா மற்றும் சேரை பி. மாரியப்பன் ஆகியோரின் முன்னிலையிலும் இந்நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சேரை நகர செயலாளர் திரு. எஸ்.எம். இஸ்மாயில் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பில் நடைபெறும் இந்நலத்திட்ட விழாவில், காலை 10 மணிக்கு அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானம், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு வேஷ்டி–சேலை வழங்குதல், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மாலை 6 மணிக்கு சேரன்மகாதேவி சாட்டுபால விநாயகர் கோவிலில் முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜை நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பகுதி, கிளை, வார்டு மற்றும் பூத் நிர்வாகிகள், தளபதி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் சேரன்மகாதேவி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற கொள்கையுடன், பிறந்தநாள் விழாவை நலத்திட்ட விழாவாகக் கொண்டாடுவோம்.
அன்புடன்,
சேரை P. மாரியப்பன், M.Com
தமிழக வெற்றிக் கழகம்,
சேரன்மகாதேவி,
அம்பாசமுத்திரம் தொகுதி,
நெல்லை கிழக்கு மாவட்டம்.






