நெல்லை, செப். 23:
திருநெல்வேலியில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சமூக சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பொதுமக்கள் நலன் மற்றும் சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கீழஆம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளையின் சேவைகளைப் பாராட்டி, சமூக அமைப்பிற்கான விருது வழங்கப்பட்டது.
கீழஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் நலன் சார்ந்த பல்வேறு சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அறக்கட்டளையின் சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட இந்த விருதை அறக்கட்டளை நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
இந்த விருது தங்களுக்கு மட்டுமல்லாமல், அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கீழஆம்பூர் பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக அறக்கட்டளை நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும், சமூக சேவையை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கிய தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் கூட்டமைப்பிற்கு அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கான உறுதியையும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பில் சலீம், ரெனாஸ், உமாமகேஸ்வரி, ராகத் அறக்கட்டளை சார்பில் முஸ்தபா, கீழஆம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை நிறுவனர் பசுமை கல்யாணசுந்தரம், பொருளாளர் ராமசாமி பரமசிவன் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






