தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கல் – மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருச்சி, ஆக.29:
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி, 17-வது வார்டு வட்டக் கழகம் சார்பில், 80-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியேற்றும் விழா ஈ.பி. ரோடு சத்தியமூர்த்தி நகர் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்றது.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்வாழ்த்துகளுடன், கழக பொதுச்செயலாளர் மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் விழா நடைபெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் குடமுருட்டி கரிகாலன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கழக நிர்வாகி வேதாத்திரி நகர் எம். பாலு கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், மாணவ, மாணவிகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மலைக்கோட்டை பகுதி 17-வது வார்டு வட்டக் கழகச் செயலாளர் எம். வெங்கடேஷ் செய்திருந்தார்.விழாவில் ஈ.பி. ரோடு சக்திவேல், ஏர்போர்ட் ஜெகன், காஜாபேட்டை சந்திரசேகர், பழக்கடை சக்திவேல், பாலக்கரை ஜேம்ஸ், பாண்டி, ஆர். வெங்கட், எஸ். பாலா, ஆர். வெங்கடேஷ், பி. தாமோதரன், கே. மணிகண்டன், கே. சக்திவேல், என். முருகானந்தம், எஸ். வேல்முருகன், வி. ஐயப்பன், வி. சதீஷ், ஜி. பாலசுப்பிரமணி, மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், மகளிர் அணி நிர்வாகிகள் கே. சசிரேகா, ஆர். மணிமேகலை மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணியினர், மகளிர் அணியினர், வார்டு நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள், தோழிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்ட நிகழ்வு, அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.






