கன்னடியன் கால்வாயில் முறையாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி ‎ ‎நீர்வளத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

சேரன்மகாதேவி, ஆக.8:

கன்ன டியன் கால்வாயில் முறை யாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி நீர்வளத்துறை அலுவலகத்தை முற்று கையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டத் தில் கன்னடியன் கால் வாய் மூலமாக அம்பை, சேரன்மகாதேவி தாலுகாவில் சுமார் 12,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக் கால்வாயில் பாசனத்திற் காக 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

‎ஆனால், தற்போது கன்னடியன் கால்வா யில் 200 கன அடிக்கும் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்படுவதோடு, அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதா கக் கூறி 10 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டு, 5 நாட்கள் அடைக்கப்ப டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள் ளனர். மேலும் அந்த 10 நாட்கள் கூட முழு மையாக 400 கன அடி தண்ணீர் திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசா யிகள் நேற்று சேரன்மகா தேவி நீர்வளத்துறை அலு வலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அதி காரிகள் இல்லாததால் விவ சாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

‎இதனையடுத்து விவசா யிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் கன் னடியன் கால்வாயில் 10 நாட்கள் முழுமையாக 400 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டு 5 நாட்கள் அடைக் கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

 உத்தரவாதத்தை மீறினால் அடுத்தகட்டமாக மறியல்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே 10 நாட்கள் திறந்து அடைப்போம் எனக்கூறி, நாங்கள் சென்ற உடனேயே கால்வாயில் அடைத்து விட்டனர். இந்த முறையும் 10 நாட்கள் திறப்பதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் உத்தரவா தத்தை மீறினால் அடுத்த கட்டமாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். மேலும் அணை நீர்மட்டமானது 80 அடிக்கு மேல் உள்ளது. விவசாயத்திற்கு 50 நாட்கள் தண்ணீர் முழுமையாக திறந்தாலே போதும். இதுவரை எந்த அரசும் இவ்வாறு எங்களை ஏமாற்றியது இல்லை, இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.