சேரன்மகாதேவியில் மிளா கடக்கும் சாலையில் ஒளிராத சோலார் மின்விளக்குகளால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
வீரவநல்லூர், செப்.10:
பாளையங்கோட்டை-அம்பாசமுத்திரம் சாலையில் சேரன்மகாதேவி ரவுண்டானா முதல் ஸ்காட் பொறியியல் கல்லூரி வரையிலான பகுதியானது மிளா நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் சாலையின் குறுக்கே திடீரென பாயும் மிளாக்களால் 15க்கும் மேற் பட்ட விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. ஆனால் இதுவரை மலையடிவாரத்திலிருந்து வரும் மிளாவினை தடுக்க வனத்துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இச்சூழலில் அப்பகுதியில் உள்ள சாலையில் புதிதாக சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அதனை பராமரிக்கும் பணியானது நெடுஞ்சா லைத்துறை கட்டுப்பாட் டில் உள்ளது. இதில் மிளா சாலையை கடக்கும் முக்கிய இடமான லக்கி பேக்கரி அருகில் சோலார் மின் விளக்குகள் ஒளிராமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட் டிகள் அச்சத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பைக்கில் செல் லும் நபர்கள் தவறிவிழும் சம்பவமும் அடிக்கடி அரங்கேறிவருகிறது. இதுகுறித்து கடந்த 10 தினங்களுக்கு முன்னரே நெடுஞ்சா லைத்துறை அதிகாரிக்கு இருள் சூழ்ந்து கிடக்கும் புகைப்பட ஆதாரத்துடன் கோரிக்கை அளிக்கப்பட்டும் அதிகாரிகள் இதனை சரிசெய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
எனவே உயரதிகாரிகள் இரவு நேரத்தில் சம்பவ இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டு மிளாக்கள் சாலையை கடக்காமல் இருக்க வழிவகை செய்வதோடு, இருள் சூழ்ந்து கிடக்கும் அப்பகுதியில் ஒளிராமல் இருக்கும் சோலார் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாகும்.






