மணிமுத்தாறு முன்னாள் பட்டாலியன்
கண்காணிப்பாளருக்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது
அம்பை. ஜூன்.24
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணிபுரிந்து வந்த முன்னாள் கண்காணிப்பாளர் வரதராஜன் கடந்த 22.08.2022 தேதி அன்று வீட்டில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்
இதனைத் தொடர்ந்து அவர் குழு காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து அவரது சம்பள வங்கிக்கணக்கில் இருந்து பிரீமியம் செலுத்தி வந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு அவரது மனைவி மாலதி மனு அளித்திருந்தார்
ஆனால் அந்த தனியார் காப்பீட்டு நிறுவனம் வரதராஜன் மரணத்திற்கான காரணம் தெளிவாக இல்லை என்று கூறி 30 லட்சத்திற்கான காப்பீட்டு தொகை தர மறுத்துவிட்டது
இந்நிலையில் அப்போது மணிமுத்தாறு 9ம் அணி கமாண்டண்ட் ஆக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜெயப்பிரபா ஆகியோரின் சீரிய முயற்சியினால் நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரதராஜன் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகை 33 லட்சத்து 81 ஆயிரத்து 699 ரூபாயை வட்டியுடன் சேர்த்து தனியார் காப்பீடு நிறுவனம் நேற்று வழங்கியது காப்பீட்டுத்தொகையை பெற்றுக்கொண்ட காவல் அதிகாரி வரதராஜன் மனைவி மாலதி கூறும்போது கமாண்டண்ட் கார்த்திகேயன் அவர்கள் த.சி.கா 12ம் அணி மற்றும் த சிகா 9ம் அணி ஆகிய இரு அணிகளில் தளவாயாக பணியாற்றிய போதும் தற்போது திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அணிக்குமாறுதலாகி சென்ற போதும் அவரது தொடர் முயற்சியும்
அரசு வழக்கறிஞர் ஜெயப்பிரபா முயற்சியும் மிகவும் உதவியாக இருந்தது
எனவே அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
இதற்கு உதவியாக இருந்த அனைத்து சமூக ஆர்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்






