வீரவநல்லூரில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்.

வீரவநல்லூரில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வீரவநல்லூரில் கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகத்தின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று வீரவநல்லூரில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் இரா. பழனி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சித்ரா சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத்தலைவர் வசந்த சந்திரா, மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி, துணை செயலாளர் ராமசாமி, விசாலாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் கழக செயலாளர் வீ. சுப்பையா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் மறைந்த கழகத்தினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றிக்காக உழைத்த கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு கட்சி வளர்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேரூர் கழகத் துணைச் செயலாளர் முத்துராமலிங்கம், மற்றும் பேரூர் கழக பொருளாளர் கவுன்சிலர் முத்துகுமார் தொகுப்புரை வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் மாஞ்சோலை மைக்கேல்,மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ் குமார் ஆதித்தன், விகேபுரம் நகர செயலாளர் கணேசன், இளைஞர் அணி சீவல முத்துக்குமார், துணை சேர்மன் ஆனந்தி,கவுன்சிலர்கள் மாவட்ட மகளிர் தொண்டர் அணி தாமரை செல்வி, வெங்கடேஸ்வரி, 15 வது வார்டு செயலாளர் சண்முகவேல், சேரை மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.