வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்!

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக ஒரு விரிவான விவாதத்தை நடத்த முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி
தலைவர் திருமாவளவன் வலியு றுத்தி உள்ளார். சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் திருமா வளவன் கூறியதாவது: தமிழகத்தில் சனாதனமயமாக்க பாஜக முயன்று வருகிறது. பாஜகவிற்கு உறுதுணை யாக தமிழகத்தில் உள்ள சில கட்சி களும் உள்ளன. பாஜக தமிழக கட்சிகளு டன் இணைந்து நடமாட தொடங்கி ய பின் ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது. கவின் ஆணவ கொலை தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு ஜாதி ஆணவ படு  கொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும். ஆணவ கொலை கள் தடுப்பு சட்டம் இயற்றவேண்டும் என வலியுறுத்து கிறோம். மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உண்டு. ஜாதி,மதத்தின் பெயரால் நடக்கும் ஆணவ கொலை கள் தேசிய அளவில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகள் ஆகும். ஆகவே மத்திய அரசு ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை இயற்று வது தான் மிகவும் சரியானது. ஆனால் பாஜக அதில் ஆர்வம் காட்டவில்லை. நெல்லை ஆணவ படுகொலையை கண்டித்து பாஜக, ஆர்எஸ்எஸ் பேசவில்லை. ஏதும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆணவபடுகொலை தடுப்பு .சட்டத்தை மத்திய அரசு நிறை வேற்றும் என்று காத்திருக் காமல், மாநில அரசுக்கு உரிய அதிகாரத் தை பயன்படுத்தி தமிழகத்திற்கான சட்டத்தை நிறைவேற்றி பிற மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்ட னத்திற்கு உள்ளாகி வருகிறது.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதம் நடத்த கூட மத்திய அரசு தயாராக இல்லை. 2003ம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்தவர்கள் குடியுரிமை ஆவணங் களை சமர்பிக்க தேர்தல் கமிஷன் சொல்கிறது. பீஹாரில் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டிய லில் இருந்து நீக்கி யிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு திட்ட மிட்ட ஜனநாயக விரோத நடவடிக் கையை தேர்தல் கமிஷன் மூலம் மோடி அரசு மேற் கொண்டு வருவது மிகவும் ஆபத்தானது. இதுதமிழகத்துக்கான நடவடிக்கை யையும் விரைவில் மாறும்.இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் இதனை நடை முறைக்கு கொண்டு வர தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. வட மாநில த்தை சேர்ந்த 80 லட்சம் பேர் தமிழ கத்தில்குடியேறி உள்ளனர். அவர் களை எல்லாம் இங்கே வாக்காளர்க ளை சேர்க்கும் முயற்சியும் அவர்களது செயல் திட்டத்தில் இருப் பதாக சொல்ல படுகிறது. எனவே இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு விரிவான விவாதத் தை நடத்த அனைத்து கட்சி கூட்டத் தை கூட்ட வேண்டும் என்று விசிக வேண்டு கோள் விடுக்கிறது. இவ்வாறு திருமாவளவன்கூறினார்.