நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் சுத்தமல்லி கிராமத்தில் வைத்து நடைபெற்று வருகிறது

நிகழ்ச்சியின் வரவேற்புரையை மாணவ தொண்டர் செல்வன் ராகவன் ஆற்றினார்

இந்த நிகழ்வின் துவக்க விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் அன்பாசிரியர் பொன்னுசாமி முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திரு நெல்லை டேவிட் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு முகாமை துவங்கி வைத்தனர்

நன்றி உரையினை மாணவத் தொண்டர் செல்வன் இசக்கி ராஜா ஆற்றினார்

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் கனிஷ் பீட்டர் பள்ளியின் திட்ட அலுவலர் திரு முருகேசன் வணிகவியல் ஆசிரியர் திரு டேவிட் செல்வநாயகம் கணிப்பொறி ஆசிரியர் திரு எட்வின் ஜெபராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்

முடிவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது