புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: விஜய்யிடம் நான் தொலைபேசியில் பேசி, தவெக அடைந்துள்ள சிறப்பான வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டில் இந்தத் தேர்தல் தீர்ப்பு, புறக்கணிக்க முடியாததும், ஒருபோதும் புறக்கணிக்கப்படாதுமான இளைஞர்களின் ஓங்கி ஒலிக்கும் குரலைப் பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பிற்கும், அவர்கள் அளித்த ஆதரவிற்கும் எனது உளமார்ந்த நன்றிகள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கவும், அவர்களுக்குச் சேவையாற்றவும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் செயல்படும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன் ராகுல் தொலைபேசியில் வாழ்த்து






