வீரவநல்லூர் பேரூர் கழக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா, மற்றும் நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் அரசு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வீரவநல்லூர் பேரூர் கழக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா, மற்றும் நாடு போற்றும் நான்காண்டு திராவிட மாடல் அரசு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் 1.08.25 அன்று வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வீரவநல்லூர் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை, வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் வீ.சுப்பையா மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் முன்னிலை, துணைச் செயலாளர் முத்துராமலிங்கம் வரவேற்புரை, பேரூராட்சி தலைவர் சித்ரா, மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி மாவட்ட பிரதிநிதி மதியரசி.தி.அண்ணாதுரை, பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ், ஒன்றிய சேர்மன் சீவலமுத்து குமார் ஆகியோர் தொகுப்புரை, சிறப்பு பேச்சாளர்கள் கழகப் பேச்சாளர் நெல்லை மணி, இளம் பேச்சாளர் கந்தபரமேஸ்வரன் ஆகியோர் திராவிட மாடல் அரசை பற்றி பேசி சிறப்பித்தனர். இக்கூட்டத்திற்கு பேரூர் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட அணி துணை அமைப்பா ளர்கள், வார்டு செயலாளர்கள், மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றிய பிரதிநிதிகள் கழக முன்னோடி கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிறைவாக வீரவநல்லூர் பேரூர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் நன்றியுரை ஆற்றினார்.