சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பப்பாக்குடி ஒன்றிய பகுதிகளில் கல் குவாரிக்குஎதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாகுடி ஒன்றிய பகுதிகளில் தனியார் கல்குவாரிகள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பலவிதமான கஷ்டத்தையும் அச்சத்தையும் உருவாக்குகிறது மற்றும் வீடுகளுக்கு ரோடு, விவசாயம், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், தெய்வ ஆலயங்கள் மேலும் சீதபற்பநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வேளார்குளம் கிராமத்திற்கு அருகிலும் புதிதாக பிரமுத்து தோட்டத்தில் கல்குவாரி அமைக்க கேரளாவை சார்ந்த அஜய் சுந்தரேஷ் குலபரா ப்ராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட், அருண் எஸ் ஆர் யுனைடெட் எம்சாண்ட் பிரைவேட் லிமிடெட் இவர்கள் கல்குவாரி அமைக்க அனுமதி கேட்டதாகவும், ஊர் பொதுமக்கள் அனுமதியை மறுப்பு தெரிவிக்க வேண்டியும் வேளாண் குளம் கிராம பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு நேரில் மனு கொடுத்துள்ளனர் இந்த கல் குவாரிக்கு உடனே அனுமதியை மறுத்து வழங்க வேண்டியும், மேலும் ஓடைக்கரை, துலுக்கப்பட்டி, பாளையங்குறிச்சி, அணைந்தநாடார்பட்டி, கீழப்பாப்பாக்குடி பகுதியில் உள்ள பொதுமக்களும் பலமுறை செயலில் இருந்து வரும் கல்குவாரிகள் மிகவும் அச்சம் ஏற்படுத்துவதாகவும் வீடுகள் சாலைகள் விவசாயம் உள்பட பாதிப்புக்குள்ளாவதாகவும் மனு கொடுத்து போராட்டமும் நடத்தியுள்ளனர். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் பனையங்குறிச்சி, ஓடைக்

கரை, துலுக்கப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பங்கேற்போடு பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. மனுக்களும் கொடுக்கப்பட்டது. மேலும் கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகளும் சேதமடைந்தும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் உள்பட ரோட்டில் செல்ல முடியாத சூழ்நிலையில் மிகவும் கஷ்டத்தில் தினமும் சென்று வருகின்றனர். ஆகவே மனுமீது உடனே ஆய்வு செய்து தாங்கள் இந்த கல்குவாரிகளுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து புதிதாக அனுமதி கேட்ட வேளார்குளம் பகுதி கல்குவாரி அனுமதியை நிராகரித்து உத்தரவிட வேண்டுமாறு ‌‌ஒன்றிய செயலாளர் மாரி செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் அருணாசலம், ஒன்றிய குழு உறுப்பினர் மாரியப்பன், மாநில குழு உறுப்பினர் கற்பகம், ஒன்றிய குழு உறுப்பினர் அபிநாத், ஜீவா, ஆறுமுகசேட் மற்றும்,
வேளார்குளம், துலுக்கப்பட்டி, பாப்பாக்குடி,பனையங்குறிச்சி ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டடோர்கள் கலந்து கொண்டனர்.