சேரன்மகாதேவி பணிமனைக்கு வந்த பொது மேலாளர் சிவக்குமாருக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு
திருநெல்வேலி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி மண்டலத்தின் பொது மேலாளர் சிவக்குமார் அவர்கள் சேரன்மகாதேவி பணிமனைக்கு வருகை தந்தார். அவரை சேரன்மகாதேவி பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் இரா. பழனி அவர்கள் சால்வை அணிவித்து மரியாதையுடன் வரவேற்றார்.
இந்த நிகழ்வில் பணிமனை கிளை மேலாளர் பாலசுப்பிரமணியன், சிவகாமி அம்மாள், தொமுச மத்திய சங்கத்தின் துணை பொது செயலாளர் கணேசன், பணிமனை செயலாளர் ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசுவாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் முதுநிலை பயணச்சீட்டு ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பணியாளர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்று பொது மேலாளர் சிவக்குமார் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். இந்த சந்திப்பின் போது பணிமனை செயல்பாடுகள், தொழிலாளர் நலன் மற்றும் போக்குவரத்து சேவைகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு சேரன்மகாதேவி பணிமனையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளிடையே ஒற்றுமையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
சேரன்மகாதேவி பணிமனைக்கு வந்த பொது மேலாளர் சிவக்குமாருக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு






