சத்­ர­பதி சிவாஜி சிலை சேதம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

மகா­ராஷ்­டிரா ஆக.31 மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தின் சந்­து­துர்க்மாவட்­டத்­தில் கடந்த ஆண்டு அமைக்­கப்பட்ட          சத்­ர­பதி சிவாஜிமகா­ராஜ் சிலை இடிந்து விழுந்த சம்­பவத்­திற்குபிர­த­மர்மோடி பகி­ரங்க மன்­னிப்பு கோரி­யுள்­ளார். “சத்­ர­பதிசிவாஜிமகா­ராஜ் என்­பது வெறும் பெயரோ அர­சரோ இல்லை.நமக்கு அவர் தெய்­வம். இன்று, நான்அவ­ரது கால­டி­யில் தலை வணங்­கு­கி­றேன், என் தெய்­வத்­தி­டம் மன்­னிப்பு கேட்­கி­றேன். எங்­கள்மதிப்­பு­கள் வேறு­பட்­டவை. எங்­களைப் பொறுத்­தவரை, எங்கள் தெய்­வத்தை விடபெரி­யது எது­வு­மில்லை.”சிலர் வீர்சாவர்க்­கரை அவமதிப்­பதை வாடிக்­கையாக கொண்­டுள்­ளனர், ஆனால் அவரை அவம­தித்­த­தற்­காக மன்­னிப்பு கேட்க அவர்­களதயா­ராக இல்லை. நான் இங்கு இறங்­கி­ய­தும், சிலை இடிந்து விழுந்­தது தொடர்­பாக சிவாஜிமகா­ரா­ஜி­டம் முதலில் மன்­னிப்பு கேட்­டேன்,இடிந்துவிழுந்­த­தில் பாதிக்­கப்­பட்டமக்­க­ளி­ட­மும் மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­கி­றேன்.கடந்த பத்து ஆண்­டு­க­ளில், மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தின்முன்­னேற்­றத்­திற்­காக நாங்­கள் தொடர்ச்­சி­யாக முக்­கிய முடி­வு­களை எடுத்­துள்ளோம். மகா­ராஷ்­டிரா திறன் மூலம் கிடைக்­கும் பலன்­களை இந்தமாநி­ல­மும்,முழுநாடும் பெறு­வதை உறு ­தி ­செய்­வ­தற்­காகவே வத்­வான் துறைமு­கத்­திற்­கான அடிக்­கல் இன்று நாட்­டப்­பட்­டது,” என பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.