‎வீரவநல்லூர் பேரூர் கழகம் சார்பில் ‎மாபெரும் மாராத்தான் போட்டி நடைபெற்றது.

‎வீரவநல்லூர்,
7. ‎01.2026.

‎மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,
‎
‎திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழக செயலாளர்,முன்னாள் சட்டப்பேரவை தலைவர்
‎இரா. ஆவுடையப்பன் அவர்களின் அறிவுறுத்தலின்படி,தலைமை செயற்குழு உறுப்பினர்
‎ஆ.பிரபாகரன் ஆலோசனையின்படி ‎சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்
‎‎பொங்கல் திருநாளை முன்னிட்டு ‎வீரவநல்லூர் பேரூர் கழகம் சார்பில் ‎மாபெரும் மாராத்தான் போட்டி நடைபெற்றது.
‎
‎இந்நிகழ்ச்சிக்கு வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் வீ.சுப்பையா தலைமை தாங்கினார்.
‎
‎வீரவநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் ‎திருமதி. சித்ரா, ‎இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாவட்ட நிர்வாகி ஆதம்இலியாஸ், லயன்ஸ் கிளப் இசக்கிசரவணன், ‎காவல் ஆய்வாளர் கவிதா
‎ஆகியோர் கொடி அசைத்து போட்டியினை  துவக்கி வைத்தார்கள்.
‎‎நகர திமுக துணைச் செயலாளர் முத்துராமலிங்கம்வரவேற்புரை ஆற்றினார்.
‎
‎நிகழ்ச்சி காலை 7 மணி அளவில் உப்பூர் நாலு முக்கு ரோட்டில் ஆரம்பித்து வீரவநல்லூர் பஸ் நிலையம் வந்தடைந்தது. மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
‎ இதில் மாவட்ட பிரதிநிதி சுப்பு குட்டி, மதியரசி அண்ணாதுரை, பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ், மாவட்ட வர்த்தக அணி கிருஷ்ணன், செல்லத்துரை,வார்டு கவுன்சிலர் சிதம்பரம்,நகர இளைஞரணி அமைப்பாளர் மணி, வார்டு செயலாளர்கள் அடைக்கலம், பாலகிருஷ்ணன், சண்முகவேல், மூக்காண்டி, அருணாசலம்,ராமசாமி பேரூர் மன்ற உறுப்பினர் சந்தனம், ஆனந்தராஜன் மற்றும் பழக முன்னோடிகள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
‎
‎