ஸ்ரீமுஷ்ணத்தில் வயதான தம்பதியரிடம் இருந்து பணத்தை திருடிய இரண்டு பெண்கள் கைது பிள்ளைகளை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் நடைபெற்ற வேதனை சம்பவம்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கொடிக்கால் தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் திருச்சி அண்ணா வளைவு திருவள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஞான சௌந்தரி( 62) இவரும், இவரது கண் தெரியாத கணவரும் தங்களது பிள்ளைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஞான சௌந்தரி அவரது கணவருடன் கோவில் வளாகத்தில் படுத்து உறங்கிய போது, அவர்கள் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை யாரோ திருடி சென்று விட்டதாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை செய்தும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வந்த போலீசார் ஞான சௌந்தரி கோவில் வளாகப் பகுதியில் இருந்த போது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி (60) ஸ்ரீமுஷ்ணம் வக்ரமாரி வடக்கு தெருவை சேர்ந்த வள்ளி (60) ஆகிய இரண்டு வயதான பெண்களும் சேர்ந்து ஞான சௌந்தரி வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை திருடியது தெரிய வந்தது. இந்நிலையில் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வயதான தம்பதியரிடமிருந்து பணத்தை திருடிய ராசாத்தி, வள்ளி ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.






