புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் வசதிக்காக மேம்பாலம் கட்டி தர வேண்டும்!

புதுச்சேரி (மதகடிபட்டு) என்ற ஊரில்,மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்து வமனை அமைந்துள்ளது.இதன் அருகே சுங்க சாவடி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் செயல்படுத்தபடும் விளம்பர பலகைகள், மதுவிலக்கு சோதனை மையம்,பாகூர் செல்லும் வழியில் பால் குளிரூட்டும் நிலையங்கள், வடமாநில இளைஞர்கள் தொழில் நிறுவனங்கள் என பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள புதுவை மாநிலத்தில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டின் விழுப்புரம் -புதுச்சேரி நுழைவு வாயில் என கூறப்படும் மதகடிபட்டில், தேசிய நெடுஞ்சாலை குறுக்கே பயணிகள் வசதிக்காக வடக்கு தெற்காக ஒரு மேம்பாலத் தை அமைத்தால்…,மணக்குள வினாயகர் கல்லூரி- மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்,பல்வேறு பணிகளுக் காக வந்து செல்லும் பொதுமக்கள், குடி குடியினை கெடுக்கும் என்ற வாசகங்களை தூர தள்ளிவிட்டு தள்ளாடு போகும் மது பிரியர்களும் பாதுகாப்பாக செல்ல ஏதுவாக இருக்கும் என பொது மக்கள்கருத்து தெரிவித்துள்ளனர்.புதுவைமாநிலம் மதகடிபட்டில் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் வசதிக்காக ஒரு மேம் பாலத்தை புதுவை அரசு “தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின்” மூலமாக மேம்பாலம் கட்டி தர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல் பெரிய உயிர் சேதங்கள் நிகழ வாய்ப்புள் ளது என “தமிழன் உதயம்” அறிவுருத்துகிறது !
—செய்திகளுக்காக:
தமிழன் உதயம் உதவி ஆசிரியர்: நாவந்தாங்கல்‌‌.பெ.எலியாஸ்,