காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த தேர்தலில் சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். நேற்றைய வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளர் டிகே.பிரபு வெற்றி பெற்றார். அடுத்த இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி, 3வது இடத்தில் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி ஆகியோர் உள்ளனர். சீமான் 30,739 வாக்குகளுடன், 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த தொகுதியில் வேட்பாளர் டெபாசிட் திரும்ப பெற 37,747 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். இதனால் சீமான் மற்றும் தேர்போகி பாண்டிடெபாசிட் இழந்தனர்.
காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்த சீமான்






