மதுரை மதுரை மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 787 நீர் நிலைகளிலிருந்து வண்டல்மண் / மண் எடுப்பதற்கு அனுமதிவழங்குவது தொடர்பாக (Removal of clayand silt) மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.06,நாள்.24.06.2024 பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி மதுரை கிழக்குவட்டத்தில் 126, மதுரைமேற்கு வட்டத்தில் 4,மதுரை தெற்கு வட்டத்தில் 6, மதுரை வடக்கு வட்டத்தில் 70, வாடிப்பட்டி வட்டத்தில் 37, மேலூர் வட்டத்தில் 270, திருப்பரங்குன்றம் வட்டத்தில் 9,உசிலம்பட்டி வட்டத்தில் 83, பேரையூர் வட்டத்தில் 73, திருமங்கலம் வட்டத்தில் 62 மற்றும் கள்ளிக்குடி வட்டத்தில் 47 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டு இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.அதனடிப்படையில்,வண்டல் மண் / மண்எடுப்பதற்கு அனுமதிவழங்குவது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை / நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணைஇயக்குநர், வருவாய் வட்டாட்சியர்கள், கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் ஏரி / நீர்த்தேக்கங்களின்பொறுப்பாளர்கள் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி (StandardOperating Procedure) கடந்தஜீன் 2024 மாதம் முதல்விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.மதுரைமாவட்டத்தில்,விவசாய நில மேம்பாட்டிற்காக 1,302 விண்ணப்பங்கள் வரப்பெற்றதில் 933 விவசாயப் பயனாளிகளுக்கு சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து வரப்பெறும் விண்ணப்பமனுக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.இம்மாவட்டத்தில் மண்பாண்டத் தொழில் செய்வதற்காக 26 விண்ணப்பமனுக்கள் மட்டும் பெறப்பட்டு 26 மண்பாண்டத்தொழில் செய்யும் பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனவே, மண்பாண்டத்தொழிலாளர்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான மண்ணை இலவசமாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தங்களுடைய விண்ணப்பமனுக்களை உரிய ஆவணங்களுடன் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகபதி வேற்றம் செய்து அனுமதிபெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.
மண்பாண்டத் தொழிலாளர்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான மண்ணை இலவசமாக பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பம்.






