ஆமதாபாத்: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திமுக துடைத்தெறியப்படும், இதனை ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக கூறினார்.
குஜராத்தில் பல்வேறு அரசு திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அமைச்சர் அமித் ஷா பேசியதாவது;
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முதற்கொண்டு தற்போது வரை பாஜ தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் 3வது முறையாக மோடி பிரதமர் ஆனார். பல ஆண்டுகளுக்கு பின் நிகழ்த்தப்பட்ட சாதனை இது.
அனைத்துத் துறைகளிலும் நம் நாடு வளர்ச்சி கண்டு, உலக நாடுகள் மத்தியில் சிறந்த நாடாக மாறும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளில் தலைவர்களோ, கொள்கைகளோ இல்லை. நாட்டில் எங்குமே அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.
உங்கள் முன்னால், இந்த மேடையில் இருந்து கொண்டே மம்தா பானர்ஜி, ஸ்டாலின் ஆகியோருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பீஹாரையடுத்து, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியானது, தேர்தலில் அமோகமாக வென்று பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தம். நீங்கள் அதற்கு தயாராக இருங்கள்.
2026ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசும், தமிழகத்தில் திமுகவும் துடைத்தெறியப்படும்.
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அவரின் பேச்சைக் கேட்ட அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கரவொலி எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. வெகு விரைவில் அமித் ஷா தமிழகம் வர உள்ள சூழலில், முதல்வர் ஸ்டாலின் பெயரை மேடையில் குறிப்பிட்டு, அரசியல் ரீதியாக அமித் ஷா பேசி இருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Advertisement
வாசகரே! தினமலர் இணையதளம் மற்றும் செய்திகள் / கட்டுரைகள் பற்றிய ஆலோசனையை பதிவிடுங்கள்.
Tags :
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
Advertisement
வாசகர்கள் கருத்துகள் ( 40 )
முதல் தமிழன்
டிச 09, 2025 11:10
மீண்டும் தி மு க ஆட்சிதான்
Rate this
நாஞ்சில் நாடோடி
டிச 09, 2025 11:09
தி மு க, வேரும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டிய கட்சி…
Rate this
V RAMASWAMY
டிச 09, 2025 11:21
அப்படித்தான், அதற்கு தமிழகம் முழுவதும், வளர்ச்சியும் வளமும் காண விருப்பமுடைய வாக்காளர்கள் முன்வந்து உழைத்து தே ஜ க. கூட்டணி வெற்றியடைய பாடுபடவேண்டும். இனியும் ஏமாந்தால் …
Rate this
S.V.Srinivasan
டிச 09, 2025 11:07
டயலாக் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா தீவிர நடவடிக்கை ஒண்ணையும் காணோம். அ தி மு க கூட்டணியை கழட்டிவிட்டு வாங்க. தனியா நின்னு பி ஜே பி பலத்தை காட்டுவோம். 2024இல் கிடைத்த 4 சீட்களை தக்க வைக்கிற வழியை பாருங்க. சென்ற சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தலை விட வாக்கு சதவிகிதம் பி ஜே பிக்கு அதிகம் இருக்கும். அதை முதலில் நிரூபித்து காட்டுவோம்.
Rate this
Krishnamoorthy
டிச 09, 2025 11:05
Vote திருட்டு
Rate this
Krishnamoorthy
டிச 09, 2025 11:04
காங்கிரஸ் துவங்கி பாஜக வரை கமிஷன் தான்
Rate this
Prabhu
டிச 09, 2025 11:01
Nice dream
Rate this
Sri Kumaran kvb
டிச 09, 2025 11:00
தமிழ் நாட்டுக்கு பழனிசாமி முருக ராஜிஜ்யம்
Rate this
பாபு
டிச 09, 2025 10:53
வெறும் வாய்ச் சவடால் மட்டுமே. ஒரு சல்லிக்கும் பிரயோசனமில்லை.
Rate this
Venugopal S
டிச 09, 2025 10:34
இதேபோல் தமிழ்நாட்டில் வந்து பேசுவாரா ?
Rate this
Madras Madra
டிச 09, 2025 10:58
தமிழ் நாடு ஒன்றும் திமுக வின் சொத்து இல்லை உலகம் முழுவதும் உள்ள திமுக வின் சொத்துக்கள் விற்று தமிழ் நாட்டின் கடன் அடைக்கலாம் என்று எதிர் கட்சி தலைவர் பேசியுள்ளதை மறக்காதீர்கள்
Rate this
நாஞ்சில் நாடோடி
டிச 09, 2025 11:08
தமிழ்நாடு பாகிஸ்தானிலா இருக்கிறது?
Rate this
cpv s
டிச 09, 2025 10:28
yes must be done first for our tamil nadu people, every hindu must vote bjp
Rate this
Trending
அமலாக்கத்துறை
நேரு
வந்தே மாதரம்
தங்கம் விலை நிலவரம்
இண்டிகோ
ஸ்மிருதி மந்தனா
ஸ்டாலின்
இன்றைய சிறப்பு பகுதி
தினமலர் பவளவிழா
எண் விளையாட்டு
வாரமலர்
பட்டம்
வேலை வாய்ப்பு மலர்
நலம்
லைப் ஸ்டைல்
ஷார்ட்ஸ்
மேலும்


































