சென்னை, செப்.13 அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் இருந்து புறப்பட்டார்.அவரை அங்குள்ள தமிழர்கள் வழியனுப்பி வைத்தனர்.அவர் இன்று துபாய்க்கு வருகிறார். அங்கிருந்து நாளை அதிகாலை சென்னைக்கு புறப்படுகிறார்.காலை 8.30 மணியளவில் சென்னையை வந்தடைவார்.அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டார்.இதற்காக அவர் கடந்த மாதம் 27–ஆம் தேதி இரவில் சென்னையில் இருந்து புறப்பட்டார்.முதலில் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான் சிஸ்கோ நகருக்குச் சென்றார்.அங்கு சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்தார்.அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.அந்த நகரில் தமிழர்களையும் சந்தித்துப் பேசினார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அமெரிக்க முதலீட்டாளர்களை தூண்ட வேண்டும் எனஅவர்களை கேட்டுக்கொண்டார்.சான்பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் உள்ள சிகாகோநகருக்கு செப்டம்பர் 2–ஆம் தேதி வந்தார்.அந்த நகரில் தொடர்ந்து 10 நாட்கள் தங்கியிருந்தார்.இங்கும் தொழில் அதிபர்களை வரிசையாக சந்தித்தார்.அடுத்தடுத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன.இந்த நகரிலும் அயலக தமிழர்களை சந்தித்தார்.நேற்றுடன் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.மொத்தம் 20 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.இந்தநிறுவனங்கள் யாவும் ரூ.7,616 கோடிஅளவுக்கு முதலீடுகளைச் செய்ய ஒப்பந்தங்களைச்செய்துள்ளன.இந்திய நேரப்படிநேற்று இரவில் சிகாகோநகரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்புறப்பட்டார்.அவரை அங்குள்ள தமிழர்கள் வழியனுப்பி வைத்தார்கள்.அவர்,இன்று மதியம் துபாய்க்கு வந்து சேருகிறார். இங்கு சுமார்10 மணி நேரம் ஓய்வு எடுக்கிறார்.நாளை அதிகாலை துபாயில் இருந்து மீண்டும் புறப்படுகிறார். காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார்.தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு சுமார் 17 நாட்கள் கழித்து தமிழ்நாட்டு மண்ணை அவர் தொடுகிறார். அவரது பயணமும் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஆகவே அவரை உற்சாகமாக வரவேற்க தி.மு.க.வினர் தயாராகி வருகின்றார்கள்.விமான நிலையத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்களும்,எம்.எல்.ஏ.க்களும்,அனைத்து மாவட்டச்செயலாளர்களும் திரள்கிறார்கள்.தி.மு.க. தலைமைநிலைய உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, பூச்சி முருகன், கலை உள்ளிட்டோரும் வரவேற்கின்றார்கள். மேலும் மேளதாளம் முழங்க முதலமைச்சர் வரவேற்கப்படுவார்.
ரூ.7,616 கோடிக்கு ஒப்பந்தங்கள்; அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நாளை உற்சாக வரவேற்பு!






