வீரவநல்லூர் அரசு பொது நூலகத்தில் தமிழக முதல்வர் படத்திறப்பு விழா கோலாகலம்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அரசு பொது நூலகத்தில் தமிழக முதல்வரின் படத்திறப்பு விழா இன்று (13.06.2026) காலை 11 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க நிர்வாகியும், சமூக ஆர்வலருமான Rtn. PAG. S. இசக்கிசரவணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அரசு பொது நூலகர் குமாரி வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து, வீரவநல்லூர் வாசகர் வட்டத் தலைவரும், ரோட்டரி சங்க முன்னாள் தலைவருமான Rtn. PP. MPHF. பீ. ஆதம் இல்யாஸ் தமிழக முதல்வரின் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தனது உரையில் நூலகங்களின் முக்கியத்துவம், வாசிப்பு பழக்கத்தின் அவசியம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் நூலகங்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், பெருமாள் பாத்துலிங்கம் மற்றும் திருமதி மணியம்மை குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அவர்கள் கல்வி வளர்ச்சிக்கும், இளைஞர்களின் அறிவாற்றல் மேம்பாட்டிற்கும் நூலகங்கள் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரவநல்லூர் வாசகர் வட்ட பொதுச்செயலாளர் Rtn. ரா. சந்திரசேகர் மேற்கொண்டிருந்தார். அவர் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
விழாவில் வாசகர் வட்ட உறுப்பினர்கள், நூலக வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன






