ரூ.7,616 கோடிக்கு ஒப்பந்தங்கள்; அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நாளை உற்சாக வரவேற்பு!

சென்னை, செப்.13 அமெ­ரிக்க பய­ணத்தை முடித்­து­விட்டு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் சிகா­கோ­வில் இருந்து புறப்­பட்­டார்.அவரை அங்­குள்ள தமி­ழர்­கள் வழி­ய­னுப்பி வைத்­த­னர்.அவர் இன்று துபாய்க்கு வரு­கி­றார். அங்­கி­ருந்து நாளை அதி­காலை சென்­னைக்கு புறப்­ப­டு­கி­றார்.காலை 8.30 மணி­ய­ளவில் சென்­னையை வந்­தடை­வார்.அங்கு விமான நிலை­யத்தில் அவ­ருக்கு சிறப்­பான வரவேற்பு அளிக்­கப்­படு­கி­றது. தமிழ்­நாட்­டிற்கு தொழில் முத­லீ­டு­களை ஈர்ப்­பதற்­காக முத­லமைச்­சர் மு.க.ஸ்டாலின் அமெ­ரிக்க பய­ணத்தை மேற்கொண்­டார்.இதற்­காக அவர் கடந்த மாதம் 27–ஆம் தேதி இரவில் சென்­னை­யில் இருந்து புறப்­பட்­டார்.முத­லில் அமெ­ரிக்­கா­வின் மேற்­குப்பகு­தி­யில் அமைந்­துள்ள கலி­போர்­னியா மாகா­ணத்­தில் உள்ள சான்­பி­ரான் ­சிஸ்கோ நகருக்­குச் சென்­றார்.அங்கு சில நாட்­கள் தங்­கி­யி­ருந்­தார். அப்­போது முக்­கிய தொழில் அதி­பர்­களை சந்­தித்­தார்.அவர்க­ளு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் செய்­யப்­பட்­டன.அந்த நக­ரில் தமி­ழர்­களை­யும் சந்­தித்­துப் பேசி­னார். தமிழ்­நாட்­டில் தொழில் தொடங்க அமெ­ரிக்க முத­லீட்­டா­ளர்­களை தூண்ட வேண்­டும் எனஅவர்­களை கேட்­டுக்கொண்­டார்.சான்­பி­ரான்­சிஸ்கோ பய­ணத்தை முடித்­து­விட்டு அமெ­ரிக்­கா­வின் கிழக்­குப்பகு­தி­யில் உள்ள சிகாகோநக­ருக்கு செப்­டம்­பர் 2–ஆம் தேதி வந்­தார்.அந்த நக­ரில் தொடர்ந்து 10 நாட்­கள் தங்­கி­யி­ருந்­தார்.இங்­கும் தொழில் அதி­பர்­களை வரி­சை­யாக சந்­தித்­தார்.அடுத்­த­டுத்து புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் ஏற்­பட்­டன.இந்த நக­ரி­லும் அய­லக தமி­ழர்­களை சந்­தித்­தார்.நேற்­று­டன் முத­ல­மைச்ச­ரின் நிகழ்ச்­சி­கள் முடி­வ­டைந்­தன.மொத்­தம் 20 நிறு­வ­னங்­க­ளு­டன் ஒப்­பந்­தங்­கள் செய்­யப்­பட்­டன.இந்தநிறு­வ­னங்­கள் யாவும் ரூ.7,616 கோடிஅள­வுக்கு முத­லீ­டு­களைச் செய்ய ஒப்­பந்­தங்­களைச்செய்­துள்­ளன.இந்­திய நேரப்­படிநேற்று இர­வில் சிகாகோநக­ரில் இருந்து முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்புறப்­பட்­டார்.அவரை அங்­குள்ள தமி­ழர்­கள் வழி­ய­னுப்பி வைத்தார்­கள்.அவர்,இன்று மதி­யம் துபாய்க்கு வந்து சேரு­கி­றார். இங்கு சுமார்10 மணி நேரம் ஓய்வு எடுக்கி­றார்.நாளை அதி­காலை துபாயில் இருந்து மீண்­டும் புறப்­ப­டு­கி­றார். காலை 8.30 மணி­ய­ள­வில் சென்னை விமான நிலையத்தை வந்­தடை­வார்.தமிழ்­நாட்­டில் இருந்து புறப்­பட்டு சுமார் 17 நாட்­கள் கழித்து தமிழ்­நாட்டு மண்ணை அவர் தொடு­கி­றார். அவ­ரது பய­ண­மும் வெற்­றி­கரமாக அமைந்­துள்­ளது. ஆகவே அவரை உற்­சாகமாக வரவேற்க தி.மு.க.வினர் தயாராகி வரு­கின்­றார்­கள்.விமான நிலை­யத்­தில் துரை­மு­ரு­கன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்­சர்­க­ளும்,எம்.எல்.ஏ.க்களும்,அனைத்து மாவட்­டச்செய­லாளர்­க­ளும் திரள்­கி­றார்­கள்.தி.மு.க. தலைமைநிலைய உறுப்­பி­னர்­கள் டி.ஆர்.பாலு, பூச்சி முரு­கன், கலை உள்­ளிட்டோரும் வரவேற்­கின்­றார்­கள். மேலும் மேளதாளம் முழங்க முத­ல­மைச்­சர் வரவேற்­கப்­ப­டு­வார்.