சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாய் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஆகஸ்ட் 20) மாலை வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஹாய். இந்த படத்தில் மறைந்த பாக்கியராஜ், ராதிகா, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆண்களின் வாழ்க்கை மூன்று ரகம் தான் என்று ட்ரெய்லர் தொடங்குகிறது.
தொடர்ந்து காதல், திருமணம், நகைச்சுவை மற்றும் குடும்ப பின்னணியை கொண்ட சுவாரசியமான கதைகளத்தை வெளிப்படுத்துகிறது ட்ரெய்லர்.
இந்த படம் இளம் தலைமுறையையும், குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் உள்ளது.
வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியவதை ஒட்டி படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






