வசதியான குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் தங்களின் உரிமத்தைவிட்டுக்கொடுத்து பொருளில்லா ரேஷன்அட்டையாக மாற்றி கொள்ள அறிவிப்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 951 ரேஷன் அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப்பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் நியாய விலைக்கடைகளில் அத்தியா வசியப் பொருட்கள் பெற விருப்பமில்லாத வசதியான குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லை எனில் தங்களின் உரிமத்தை விட்டுக் கொடுக்க ஏதுவாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக தங்களது அட்டையின் உரிமத்தை விட்டுக் கொடு த்து பொருளில்லா ரேஷன்அட்டையாக மாற்றி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திர வல்லி தெரிவித்துள்ளார்.
வசதியான குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் தங்களின் உரிமத்தை விட்டுக்கொடுத்து பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றி கொள்ள அறிவிப்பு!






