இந்திய அளவில் புகழ்பெற்ற மாடலாக இருந்த மீனாட்சி சவுத்ரி, “அவுட் ஆப் லவ்” என்ற வெப் சீரிஸ் மூலம் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் மகேஷ்பாபு உடன் இணைந்து “குண்டூர் காரம்” என்ற படத்தில் நடித்தார் பிறகு தமிழில் விஜய் ஆண்டனி உடன் “கொலை” ஆர் ஜே பாலாஜியுடன் “சிங்கப்பூர் சலூன்” ஆகிய படங்களை தொடர்ந்து டீஏஜிங் செய்யப்பட்ட விஜய்க்கு ஜோடியாக “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் விஜயுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மீனாட்சி சவுத்ரி நான் தான் “தி கோட்” படத்தில் இருந்து உங்கள் ஸ்ரீநிதி இன்னும் நான் நிஜ வாழ்க்கைக்கு திரும்ப தீவிரமாக முயற்சித்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை மீனாட்சி சவுத்ரி






