உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தீக்குளிக்க முயன்ற திமுக இளைஞரணி நிர்வாகி கைது
தென்காசி, ஆகஸ்ட் 4:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தென்காசி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான டி.கே. கிருஷ்ணராஜ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையின்போது, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அவரை தடுத்து மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி டி.கே. கிருஷ்ணராஜை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து திமுக நிர்வாகிகள் 28 பேர் கைது செய்யப்பட்டனர்
இந்தச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






