திருநெல்வேலி மாவட்டம் – நாங்குநேரி அருகே பரிதாபம்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பெரும்பத்து கிராமத்தில் கடந்த 01.03.2026 அன்று பரிதாபகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அக்கிராமத்தைச் சேர்ந்த திரு. ஜான் மார்க் (மாற்றுத் திறனாளி) கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஜான் மார்க் அவர்களின் மனைவி வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். மேலும், 10 மற்றும் 8 வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் கடும் வறுமை நிலையில் வாழ்ந்து வருகிறது.

இந்நிலையில், சமூக அக்கறையுடன் செயல்படும் சிலர் இன்று அந்த குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், உடனடி நிவாரணமாக ரூ.10,000 நிதியுதவி வழங்கினர்.
இந்த குடும்பம் எதிர்காலத்தில் தன்னிறைவு பெற பொதுமக்கள் மற்றும் நலத்திட்ட அமைப்புகள் முன்வந்து உதவ வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனிதாபிமான முயற்சியில் ரா. இளங்கோ, வழக்கறிஞர் அரசு பிரபாகரன், முத்துமணி இன்சூரன்ஸ் பிரபாகரன், டாக்டர் கணேசன், அரிச்சந்திரன் மற்றும் பொறியாளர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்குடும்பத்திற்கு சமூக அமைப்புகள் மற்றும் நல்ல உள்ளங்கள் தொடர்ந்து உதவி செய்ய வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.