புது டெல்லி ஜூலை 30- போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் தான் கெஞ்சியது என்று தெரிவித்த பிரதமர் மோடி தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை என்று ஆபரேஷன் சித்தூர் குறித்து பாராளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்தார். ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக இந்தியா தரப்பில் இருந்து ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கை மேற் கொள் ளப்பட்டது இது பற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியிடம் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் ஆபரேஷன் சித்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர் கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மக்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சித்தூர் நடவடிக்கை பற்றி நேற்று விளக்கம் அளித்து பேசினார் இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சித்தூர் பற்றி அவையில் நேற்று பேசினார் இதைப் போன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான எம்பி பிரியங்கா காந்தி மக்களவை எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் அவையில் நேற்று பேசினார் இதனை தொடர்ந்து பிரதமர்மோடி ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கை பற்றி நேற்று அவையில் பேசினார் அவர் பேசும்போது ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி அப்பாவி மக்களின் மதம் என்னவென்று கேட்டுவிட்டு அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் கொடூரத்தின் உச்சம். இந்தியாவை வன்முறையில்தீயில் தள்ளுவதற்கான நன்றாக திட்டமிட்டப்பட்ட முயற்சி. இந்தியாவின் வன்முறைகளை பரப்புவதற்கான சதித்திட்டமே இது. அந்த சதித்திட்டம் ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டுள்ளது என்பதற்காக நான் நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 22ஆம் தேதி நான் வெளிநாட்டில் இருந்தேன்.. உடனடியாக நான் நாடு திரும்பி னேன் திரும்பி வந்ததும். கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தினேன் அப்பொழுது இதை நம்முடைய தேசம் தொடர்பான விஷயம் பயங்கரவாதத்திற்கு சரியான பதிலடி தரப்பட வேண்டும் என்றும் தெளிவாக அறிவித்தேன் என் மீது நம்பிக்கை கொண்ட 140 கோடி இந்தியர்களும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இந்தியாவின் பதிலடி பாகிஸ்தான் தடுக்க முடியவில்லை அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்திய அடி பணியாது அந்த மிரட்டல் இனி எடுபடாது இந்தியா ஒருபோதும் பயப்படாது பாகிஸ்தான் நாட்டின் தொலைதூரப் பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் தாக்கல் நடத்தியது.ராணுவத்திற்கு முழு அளவில் சுதந்திரம் அளிக்கப் பட்டது எந்தப் பகுதியில் எப்பொ ழுது எப்படி பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என ராணுவமே முடிவு செய்தது தாக்குதலை நிறுத்துமாறு எந்த உலக தலைவர்களும் கூறவில்லை. தாக்குதலை நிறுத்து மாறு பாகிஸ்தான் தான் நம்மிடம் பேஞ்சியது இந்தியாவின் உற்பத்தி செய்யப்பட்ட ட்ரோன்கள் ஆயுதங்கள் கொண்டு தாக்க தாக்குதல் நடத்தப்பட்டு பயங்கரவாதமும் முகாம்கள் அளிக்கப்பட்டது என ஒப்படைகளும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு செயல்பட்டன அந்நாட்டின் விமான தலைநகங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது ஒன்று தாக்குதல் நடத்தியவர்கள் அடுத்த தாக்குதலுக்கு திட்டமிட்டனர் ஆனால் தற்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த எண்ணுபவர்களுக்கு தூக்கம் போய்விட்டது இந்த பதிலடிக்கு இந்தியாவின் தற்சார்பு தொழில் நுட்பங்கள் கை கொடுத்தன ஆப்ரேஷன் சித்தூர் மூலம் உலகமே இந்தியாவின் வலிமையை உணர்ந்துள்ளது என்று அவர் பேசி உள்ளார்.
பாேரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது: தாக்குதலை நிறுத்துமாறு உலகின் எந்த தலைவர்களும் கூறவில்லை ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லி.யில் பிரதமர் வி்ளக்கம்!






