சேரன்மாதேவி அருகே படித்துரை திறப்பு – அம்பை எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா திறந்து வைத்தார்

சேரன்மாதேவி அருகே படித்துரை திறப்பு – அம்பை எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா திறந்து வைத்தார்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி யூனியனுக்கு உட்பட்ட திருவிருத்தான்புள்ளி கிராம பஞ்சாயத்தில் பிள்ளைகுளம் பகுதியில், மணிமுத்தாறு பிரதான கால்வாயில், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024 ல், ரூ 15 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் மற்றும் படித்துறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் அம்பை எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் மாநில ஜெ.பேரவை துணைச் செயலாளர் சிவன் பாபு, மாவட்ட அவைத் தலைவர் கூனியூர் மாடசாமி, மாவட்ட துணைச் செயலாளர் மாரிமுத்து, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், அதிமுக கிளைச்செயலாளர்கள் முத்துக்குமார், பட்டு சுந்தர், ஜெபராஜ், பெருமாள் சேட் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.