சென்னை, செப். 26 “சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை,” என்று சென்னை மாநகர மேயர் பிரியா கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் ஆக நியமிக்கப்பட்ட மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மணலி மண்டல அலுவலகத்துக்கு மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியில் அலட்சியம்,உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.இந்தப் பணியிடமாற்றம் குறித்து பேசியுள்ள மாதவி,
“லிப்ஸ்டிக் பூசிக்கொண்டு பணிக்கு வரக் கூடாது என்ற உத்தரவை மீறியதால் தண்டிக்கப்பட்டுள்ளேன்.
இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி எனக்கு அளிக்கப்பட்ட மெமோவுக்கு பதில் அளித்துவிட்டேன்.
நான் பணி நேரத்தில் வேலை செய்யாமல் இருந்தால் மட்டுமே மெமோ பயனுள்ளதாக இருக்கும்” என்று குற்றம் சாட்டியதாக தகவல்கள் வெளியானது.இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சென்னை மாநகர மேயர் பிரியா, “டபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும் லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் இல்லை,” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண் டபேதார் இடமாற்றத்துக்கு ‘லிப்ஸ்டிக்’ காரணமா? – சென்னை மாநகராட்சி மறுப்பு






