சேரன்மகாதேவியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்’நடைபெற்றது.

‘நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்’

திருநெல்வேலி

03.02.2026.

திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவி பேரூராட்சியில்  இன்று பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேரன்மகாதேவி சார் ஆட்சியர் திரு ஆகாஷ் குப்தா, தலைமை செயற்குழு உறுப்பினர் திரு பிரபாகரன் குத்தவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.
இந்த முகாமில் இணை இயக்குனர் மரு. லதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு விஜய சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.ரமேஷ் மற்றும் முகாமில் பொது மருத்துவம் மகளிர் மருத்துவம் குழந்தைகள் மருத்துவம் மற்றும் உயர்நிலை மருத்துவ பரிசோதனைகளுடன் முழுமையான உடற்பயிற்சிதனைகளும் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைகள் மட்டுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் போன்றவை சேவைகள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சார இயக்கமான சரியான உண்ணுங்கள் இயக்கம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பேரூராட்சி மன்ற தலைவி திருமதி. தேவி ஐயப்பன் ,சேரை ஒன்றிய செயலாளர் ஆ.முத்துப்பாண்டி(என்ற) பிரபு ,ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், நகரச் செயலாளர் மணிஷா செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் அபுபக்கர், மாவட்ட பிரதிநிதி சீவல முத்து குமார், மற்றும் கழக நிர்வாகிகள் மேலும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இம்முகாமில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.