விதைப்பந்துகள் தயாரிப்பு மலேசியர்கள் நேரில் பங்கேற்பு

விதைப்பந்துகள் தயாரிப்பு
மலேசியர்கள் நேரில் பங்கேற்பு

ஆலங்குளம் ஜூன் 12

வீ.கே.புதூர் பகுதியில்
மலேசியர்கள் நேரில் பார்வையிட்டு பங்கேற்ற விதைப்பந்து நிகழ்வுகள்

மலேசிய நாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் விதைப்பந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் விதம், மாணவ மாணவியர் எழுச்சி, விதைப்பந்துகளை பிஞ்சுக் குழந்தைகள் ஆர்வத்துடன் செய்யும் விதத்தை நேரில் கண்டு பூரிப்படைந்தனர்.

பூனாட்சி என்ற நாகப்பன், செல்வம் என்ற சாந்தி இருவரும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆரவாரமாக நடந்து வரும் விதைப்பந்து புரட்சியைக் காண நேரில் வந்திருந்தனர். அவர்களை வெங்காடம் பட்டி சமூக நல ஆர்வலர் பூ. திருமாறன் வரவேற்றார்.

வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விதைப்பந்து விளக்கக் கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். டாக்டர். மாலதி வரவேற்றார். தொழிலதிபர் ஹரி பிரியாணி ஹரிஹர செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளிக்கு புதிய கணிப்பொறி வழங்கினார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் அரசு பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிப்பை விளக்கினார்.

ஆசிரியர் சக்தி முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியை அன்ன புஷ்பம் மற்றும் பலர் செய்திருந்தனர். தொடர்ந்து சாதனை மாணவர்களான அபர்ணா தேவி, லேகா ஸ்ரீ, ஹர்ணிக்கா, டால்வின் பால் ஆகியோரை ஹரிஹர செல்வன், திருமாறன் கௌரவித்தனர்