நெல்லை,ஏப்.5- தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .
இதில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாள நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வி.பி.துரை எல்.எல்.பி. எனும் சட்டப்படிப்பை முடித்துள்ளார். வி.பி.துரையின் தந்தை வேல்துரை சேரன்மகாதேவி தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது தாத்தா பாபநாச நாடார், கங்கனாங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். வி.பி.துரை கடந்த 2010-ம் ஆண்டு நெல்லை நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக செயல்பட்டவர் . காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி வழி காட்டுதலின் பேரில் 68,574 இளம் உறுப்பினர்களை இளைஞர் காங்கிரசில் இணைத்து தமிழக அளவில் சாதனை படைத்தார். கன்னியாகுமரி தொடங்கி தென்காசி வரை சுமார் 3 ஆயிரம் இளைஞர்களுடன் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தினார். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் கிடைக்கவும்,முதியோர்களுக்கு முதியோர் உதவிதொகை கிடைக்கவும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.சாலை வசதி, சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து பணியாற்றி வரும் வி.பி.துரை வருகிற6-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்கிறார்.
அம்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரை 6-ந் தேதி மனுதாக்கல் செய்கிறார்






