சேத்தியாத்தோப்பில் நடுவழியில் ரிப்பேரான அரசு பேருந்து
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் வடலூரில் இருந்து பாளையங்கோட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து(17A) திடீரென பழுதாகி நின்றது. இதனால் பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அவசர அவசரமாக இறக்கிவிடப்பட்டனர். இதனால் மாற்று பேருந்து ஏற்றி விடாமல் பழுதான அரசு பேருந்து சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் உள்ளே கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. இதனிடையே பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள் இனியும் அரசு பேருந்தை நம்பி பயனில்லை கிடைக்கும் பேருந்தில் ஏறி ஊர் செல்வோம் என்று அங்கிருந்து நகர்ந்தனர். அப்போது பேருந்தில் பயணம் செய்து பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட ஒரு இளைஞரும், பெண்மணியும் மிகுந்த வேதனை அடைந்தனர்.
ஆட்சியில் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழலும், அடிக்கடி இது போன்று அரசு பேருந்துகள் பழுதாகி வருவது தொடர் கதையாகவும் இருந்து வருகிறது. என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






