எழுச்சித்தமிழர் பிறந்தநாளில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் மூன்று நாள் மண்டல பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது.

25-8-2024 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள
ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில் மூன்றாம் நாள் மண்டல பூஜையும் அன்னதானமும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது….

இந்த நிகழ்வில் முன்னிலை வகித்து சிறப்பு செய்த ஊர் பெரிய தனக்காரர்கள்
பழனி சின்னப்பையன் கந்தசாமி பழனி நடேசன் ஜெமினி மாதையன் அசோகன் சின்னப்பன் சுந்தரராஜன் முருகன் அய்யனார் ராஜா சுப்பிரமணி ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்….

அன்னதானத்தை துவக்கி வைத்து சிறப்பித்தவர்கள்
சேலம் வடக்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் செங்கதிர் மற்றும் முத்தம்பட்டி முகாம் விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் சேட்டு ராஜா சுரேஷ் முருகமணி ஜெயா சரவணன் ஆகியோர்கள் அன்னதானத்தை துவக்கி வைத்து சிறப்பித்தனர்….

இந்த அன்னதான நிகழ்வில் ஊர் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தையும் சாமி தரிசனத்தையும் பெற்றுக் கொண்டனர்

அன்னதான நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் முத்தம்பட்டி முகாம் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாடு செய்து சிறப்பித்தனர்

களத்தில்
பெ வேல்முருகன் ஒன்றிய செயலாளர் வி சி கட்சி வாழப்பாடி சேலம் வடக்கு