கூட்ட நெரிசலை தவிர்க்க தீபாவளி பண்டிகை முடித்து பணிக்கு சென்னை திரும்பும் மக்களுக்கு சிறப்பு இரயில் இயக்கக் கோரிக்கை.
தீபாவளி பண்டிகை முடித்து சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு திரும்பும் மக்கள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நவம்பர் மூன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதோடு, அலைபேசியிலும் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தேன். அதுபோலவே புதுக்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் வரை விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சிறப்பு இரயில் இயக்க வேண்டி, மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியும், அலைபேசி வழியாகவும் கேட்டுக் கொண்டேன்.






