ஆகஸ்ட் 13
திருச்செந்தூர்
திருச்செந்தூர் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டித்து இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மின் வாரிய அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் மற்றும் நிர்வாக நடுவர் திரு.பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் திரு சுந்தர், திருச்செந்தூர் மின்வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் திரு முத்துராமன் ஆகியோரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்னாள் மண்டல செயலாளர் தமிழினியன், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், சமூக ஆர்வலர்கள் தமிழ்ச்செல்வன், எட்வர்ட், கருத்தில் பரப்பு மாநில துணைச் செயலாளர் தமிழ்க்குட்டி, முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், செய்தி தொடர்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து, தமிழக மாணவர் இயக்கத்தை சார்ந்த சிவநேசன், அஜித்குமார், ஜெயக்குமார், சுதாகர், மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணை செயலாளர் சர்மிளா, சமூக நல்லிணக்கப் பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர் முத்து, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் முத்துராமன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய அமைப்பாளர் அருண், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் லாசர் ஆகியோருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சு.விடுதலைச் செழியன் கலந்து கொண்டேன்.
பேச்சுவார்த்தையின் முடிவில் மின் கட்டணம் வசூல் செய்ய மாற்று பணியாளர் உடனே நியமிக்கப்படுவார் என்றும், இணையம் வழியாக கூடுதல் கட்டணமின்றி மின் கட்டணம் எளிதாக செலுத்துவதற்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டு கையெழுத்தானது.
அதன் அடிப்படையில் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.







