இஸ்ரேல் – ஈரானில் உள்ள தமிழர்களுக்கு அனைத்து உதவியும் செய்யப்டும்முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!

சென்னை, ஜூன்.22 இஸ்ரேல் – ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக
அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு  உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.இது குறித்து வெளியிட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் இஸ்ரேல் – ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.இந்தச் சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை கண்டு பிடித்து தமிழ் நாட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர் களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ் நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.இதற்கென புதுடெல்லி தமிழ் நாடு இல்லத்தில் 24 x 7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதவி எண்கள்பின் வருமாறு: தொலைபேசி: 011 24193300 (Land line), கைப்பேசி எண்: 9289516712:  (Mobile Number with Whatsapp), மின்னஞ்சல்: tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com அது மட்டு மின்றி தமிழ் நாடு அரசின்  சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில், செயல் பட்டு வரும் 24 x 7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளவும், தங்கள்பகுதியில் உள்ள இந்திய தூதரகம்வெளியிடும் அறிவுறுத்தல்களை பின் பற்றி பாது காப்பாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தியாவிற்குள் – 1800309 3793, வெளிநாடு: +918069009901 / 08069009901,+ 9 1 8 0 6 9 0 0 9 9 0 0 / 08069009900 (MissedCall) மின்னஞ்சல் – nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறும் பேரது , ஈரானில் உள்ள தமிழர்களை மீட்க தமிழக முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார் ஈரான் பகுதியில் போர் நடக்கும் இடத்தில் உள்ளவர்கள் சேந்த ஊர் திரும்ப விரும்பினால்அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தாயகம் அழைத்து வர முதல்வர் தயாராக உள்ளார். முதல்வரின் தனிச்செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்   மூலம் ஆன்லைன் மூலம் ஈரானில் இருக்கும் தமிழர்கள் குறித்த தகவலை பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது என்றார்.