சென்னை ஆகஸ்ட் 19,
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 18.8.2024 மாலை 6.50 மணிக்கு
“முத்தமிழறிஞர்கலைஞர்நூற்றாண்டு நாணயம்”சென்னைகலைவாணர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்
சிங்கரங்களால் வெளியிடப்பட்டது.
இதையொட்டி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் முத்தமிழறிஞர்கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நடைபெற விருப்பது அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், இவ்விழா இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான கலைஞருக்காக நடைபெறும் முக்கியமான விழாவாகும் என்றும் தெரிவித்துள்ள பிரதமர், இந்தியஅரசியல், இலக்கியம் மற்றும் சமூகப் பணிகள் ஆகிய பல்வேறு களங்களில் உயர்ந்து விளங்கிய தலைவராகதிகழ்ந்த கலைஞர், தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் எப்போதும் அக்கறை கொண்டவராக விளங்கினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஒரு சிறந்த அரசியல் தலைவராகதிகழ்ந்த கலைஞர், மக்களால் பலமுறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பதவியிலிருந்து சமூக வளர்ச்சிமற்றும் அரசியல் குறித்த அவரது ஆழமான புரிதலை அடிக்கோடிட்டுக்காட்டும் வகையில் நமது நாட்டின் வரலாற்றில்அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.பன்முகத்திறமை கொண்ட கலைஞர், தனது எழுத்துக்களின் மூலம் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் இன்றும் மக்களால் நினைவு கூரப்படுகின்றன என்றும்,அவரது இலக்கிய ஆற்றல், அவரதுபடைப்புகளின் மூலம் பிரகாசித்தது மட்டு மல்லாமல், அவருக்கு’கலைஞர்’என்ற அன்பான பட்டத்தையும் பெற்றுத் தந்துள்ளது என்றும்குறிப்பிட்டுள்ளார்.இந்த நினைவு நாணயம்வெளி யிடப்படு வதன் மூலம்,கலைஞரின் நினைவு போற்றப்படுகிறதுஎன்றும்,இந்த நினைவு நாணயம்கலைஞர் பின்பற்றிய கொள்கைகள்,மரபுகள் மற்றும்அவரதுபணிகளை என்றென்றும் நினைவூட்டு வதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த முக்கியமான தருணத்தில் கலைஞருக்கு தனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச்செலுத்த விரும்புவதாகும் குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி நாம் நம்பிக்கையுடன் நடைபோடும் இந்தவேளையில்,கலைஞர் போன்ற தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும், நம் தேசத்தின் பயணத்தைத் தொடர்ந்து வடிவமைக்கும் என்றும்,முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா மாபெரும் வெற்றியடைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வாழ்த்துச் செய்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி தமது உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்தமைக்கும், இந்நிகழ்வு வெற்றிபெற அவரது ஆதரவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்






