தவெக மாநாட்டு பணி80 சதவீதம் நிறைவு : செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பு; 75 ஆயிரம் இருக்கைகள் அமைப்பு!

விழுப்புரம், அக். 23 நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்.27-ம் தேதி நடைபெற
உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை 60 அடிஅகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப் பட்டுள்ளது. தற்போது உள்அலங்கரிப்பு பணிநடைபெறுகிறது. திடலில் பார்வையாளர்கள் அமரும்
இடங்களில், பகல்போல் ஜொலிக்கதிடல் முழுவதும் 15 ஆயிரம் ஹை மாஸ் விளக்குகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.திடலின் இருபுறமும் மொபைல் கழிப்பறை அமைக்க
300 தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். மாநாட்டு முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அமைக்கப்படுகிறது.திடலைச் சுற்றி தகர தகடுகளால் மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். மாநாட்டு மேடைக்கு விஜய் மற்றும்சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி சாலை அமைக்கப்பட்டுள்ளது தற்போது மாநாட்டுத் திடலுக்குள் யாரும் வர முடியாதபடி, பவுன்சர்கள் நிறுத்திவைக்கப் பட்டுள் ளனர். மாநாடு நடைபெறும் பகுதிக்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முற்பட்ட விவசாயிகளையும் பவுன்சர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.மாநாடு வளாகத்தைச் சுற்றிலும் 20 ஆயிரம் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு பந்தலில் சுமார் 75 ஆயிரம் இருக்கைகள்போடப்பட உள்ளன. இரவு-பகலாக மாநாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் மாநாட்டு பந்தல் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் பகுதியில் எதிர்பாராது மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வண்ணம்
மணல்பரப்பில் ஜல்லி கற்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு நிலப் பரப்பு உயர்த்தப் பட்டுள்ளது .திடலின் உள்ளே செல்லும் மின் ஒயர்களை அகற்றி கேபிளாக பூமியில் புதைக்க மின்வாரியம் அனுமதி அளிக்கவில்லை. மாநாட்டுக்குத் தேவையான மின்சாரம் ஜெனரேட்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.பாதுகாப்பு கருதி மாநாடு நடைபெறும் பகுதியில் உள்ளகிணறுகளை, இரும்பு கார்டர்கள் மீது மரப்பலகைகள் அமைத்து மூடப்படுகின்றன. தொண்டர்களுக்கு மாநாட்டு திடலில் உணவு வழங்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால்,
கூட்ட நெரிசல் ஏற்படும் எனக்கருதி, மாநாட்டுக்கு வரும் வாகனங்களிலேயே உணவு வழங்க திட்டமிட்டுள்ளனர்.மழை வராமல் தடுக்க யாகம்:இதற்கிடையே, மாநாடு நடைபெறும் நாளன்று மழைபெய்யாமல் இருக்க தவெக சார்பில் யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.