மதுக்­க­டை­களை குறைக்க தமி­ழக அரசு ஆலோச­னை -­அ­மைச்­ச­ரவை கூட்­டத்­தில் இறுதி முடிவு­ !

சென்னை, அக்.04 தமி­ழக அமைச்­ச­ர­வைக் கூட்­டம் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தலைமை­யில் தலை­மைச் செய­ல­கத்­தில் வரு­கிற 8ந்தேதி நடைபெறஉள்­ளது.துணைமுத­ல­மைச்­சர் நிய­ம­னம் மற்­றும் அமைச்­ச­ரவை மாற்­றத்­திற்கு பிறகு நடைபெ­றும் இந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் பல்­வேறு முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட உள்ள­தாக தக­வல்­கள் வெளி­யாகி வரு­கின்­றன.தமி­ழ­கத்­தில் மதுக்­கடை மற்­றும் போதைப் பொருட்­களை ஒழிக்க பல்­வேறு அர­சி­யல் கட்சி­கள் வலி­யு­றுத்திவரும் நிலை­யில் டாஸ்மாக் மதுக்­கடை­க­ளின் எண்­ணிக்­கையை மேலும் குறைக்க அரசு முடி­வெ­டுக்­கும் எனதெரி­கி­றது. இது சம்­பந்த­மாக அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் முடி­வெடுக்க வாய்ப்­புள்­ள­தாக தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளது.தமிழ்­நாட்­டில் இப்போது 4 ஆயி­ரத்து 829 மதுக்­கடை­கள் உள்ளன. எப்.எஸ்.2, எப்.எல்.3 மதுக்­கடை­கள் 1,685 உள்­ளது. மேலும் 400 மதுக்­கடை­க­ளுக்கு அனு­மதி கேட்டு வந்த விண்­ணப்­பங்­கள் அர­சி­டம் நிலு­வை­யில் உள்ளது. இந்த நிலை­யில் 500 மதுக்­கடை­களை மூடு­வ­தற்கு அமைச்­ச­ரவை கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட­லாம் எனஎதிர்­பார்க்­கப்­படு­கி­றது.தமிழ்­நாட்­டில் பூரணமது­வி­லக்கு வேண்­டும் என்று பல்­வேறு அர­சி­யல் கட்­சி­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.விடு­தலை சிறுத்­தை­கள்கட்சி தலைவர் திரு­மாவளவன் உளுந்­தூர்­ பேட்­டை­யில் நடத்­திய மஒ­ழிப்பு மக­ளிர்மாநாட்­டி­லும் மதுக்­கடை­களை மூடு ­மாறுகோரிக்கை வைத்­துள்ளார். பா.ம.க. நிறு­வனர் டாக்­டர் ராம­தாஸ் மதுவை ஒழிக்க வேண்­டும் என்று கட்சிதொடங்­கிய காலத்­தில் இருந்தே வலி­யு­றுத்தி வரு­கி­றார். தமி­ழகஅர­சும் போதைப் பொ­ரு­ளுக்கு எதி­ராக ஒவ்­வொரு மாவத்­தி­லும் விழிப்­பு­ணவு பேர­ணியை நடத்தி வரு­கி­றது. இந்த நிலையில் மதுக்­கடை­க­ளுக்கு எதி­ராக பல­ரும் குரல் கொடுத்து வரு­வதால் முதற்­கட்­ட­மாக 500 மதுக்­கடை­களை மூடு­வ­தற்குஅரசுமுடி­வெ­டுக்­கும்  என தெரி­கி­றது. இதுதவிர,அமைச்ச­ர­வைக்கூட்­டத்­தில் தமி­ழக அரசு செயல்­படுத்தி வரும் கலைஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை திட்­டம். புது­மைப் பெண்திட்­டம்,தமிழ்புதல்­வன் திட்டங்­கள் தொடர்­பா­க­வும் முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட வாய்ப்புள்­ள­தாக தெரி­கி­றது.மேலும் புதிய தொழில் நிறு­வனங் க­ளுக்கு அனுமதி­ அளிப்­பது தொடர்­பாக அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் கொள்கை ரீதி­யான முடி­வு­கள் எடுக்­கப்­படும் என தெரி­கி­றது­.