சேத்தியாத்தோப்பு அருகே மது போதையில்
தூக்குபோட்டு பட்டதாரி வாலிபர் இறப்பு
மது அரக்கனால்சீரழிந்து உயிரை விடும் இளைஞர்கள்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன (எ) ஜெயச்சந்திரன் (20 ) பி. காம் பட்டதாரியான இவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு சொந்த கிராமத்திற்கு வந்த இவர் மதுபோதையில் இருந்துள்ளார். இதனை கண்ட பெற்றோர் மது அருந்தக்கூடாது என கண்டித்தனர். இதனால் கோபமடைந்து தற்க்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார் கஜேந்திரன். அவரது பெற்றோர்கள், உறவினர்கள் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர் காணவில்லை. இதனையடுத்து போதையில் இருந்த கஜேந்திரனை காணவில்லை என சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தன் பேரில் தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் தேடி வந்த நிலையில் கஜேந்திரன் பெரியக்குப்பம் கிராமப்பகுதியில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்க்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்தனர். உடனடியாக உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே ஆட்சியில் தமிழகத்தில் மது என்ற அரக்கனால் பல குடும்பங்கள் சீரழிந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டு வரும் நிலையில், இது போன்று சாதிக்க வேண்டிய இளைஞர்களும் மது என்ற அரக்கனால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்வது வேதனை அளிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்






