தேமுதிக மாநாடு நடைபெறும் இடத்தை பிரேமலதா பார்வையிட்டார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகில் உள்ள பாசார் கிராமத்தில் வருகிற 9 ஆம் தேதி தேமுதிக கட்சியின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைப்பெறவுள்ளது.
இந்நிலையில் மாநாடு இடத்தினை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார். மேலும் விஜயகாந்த் மறைந்த பிறகு நடக்கும் முதல்மாநாடு என உருக்கமாக தெரிவித்தார் தமிழகம் முழுவதும் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
உடன் அவர்கள் மகன் விஜய் பிரபாகரன் சண்முக பாண்டியன், மாநில செயலாளர் எல் கே சுதீஷ், மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் சிவகொழுந்து, உமாநாத்,ஒன்றிய செயலாளர் சேகர்,மாவட்ட சமூக வலைதள அணி துணைச்செயலாளர் நகர் குமரவேல் கட்சியினர் இருந்தனர்.






