ஏரியில் மூழ்கி இரு குழந்தைகள் பலி!

ஏரியில் மூழ்கி இரு குழந்தைகள் பலி.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழ் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவதர்ஷினி வயது 8 தந்தை பெயர் சாஸ்தா ,குணா வயது 6 தந்தை பெயர் வேல்முருகன் ஆகிய சிறுவன் சிறுமி இருவரும் குணாவின் தாயார் ஆஷா உடன் அசகளப்பு ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்கள்.

இரு குழந்தைகளும் தனியே சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது நிலை தடுமாறி இருவரும் ஏரியில்மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர்.

தாயார் ஆஷா குழந்தைகளை காணவில்லை என கதறி அழுதுள்ளார் இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சென்று தேடிப் பார்த்து நீரில் மூழ்கி இருந்ததை கண்டு இருவர்களையும் இறந்த நிலையில் மீட்டனர்.

இத்தகவல் அறிந்து விரைந்து சென்ற சிறுப்பாக்கும் போலீசார் இறந்து போன இரு சிறுவர்களின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இச்சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியது.