சென்னை, அக். 10: “வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வருகிற அக். 15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்களிலும் இ ந் த ம ரு த் து வ மு காம்கள் நடத்தப் படவுள்ளது,” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழக அரசும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பருவமழையை ஒட்டி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என்கின்ற வகையில் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் எங்கே எல்லாம் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்படுகிறதோ, குறிப்பாக ஒரு தெருவிலோ அல்லது ஒரு ஊரிலோ ஒன்றுக்கும் மேற்பட்ட காய்ச்சல் பாதிப்புகள் இருக்குமானால் உடனடியாக அங்கே மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டு, அந்த வகையில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் எனும்,மகத்தான திட்டம் தற்போது வரை ஒருகோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து571 பேரை சென்றடைந்திருக்கிறது.ஐ.நா சபை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு United Nation Intergracy Task Force Award 20 2 4என்கிற விருதினை அறிவித்திருக்கிறார்கள். இந்த விருதுகடந்த செப். 25-ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 79-வது ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப் பட்டிருக்கிறது.தமிழகத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் மருத்துவ திட்டத்துக்குகிடைக்கப் பெற்றுள்ளது.இத்தகையஅங்கீகாரத்திற்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர் கள்,களப்பணியாளர்கள் அனைவருக்கும் இந்த விருதினை தமிழக முதல்வர் அர்ப்பணித் திருக்கிறார். மழைக்காலம் என்பதால் மழைக்கால மருத்துவ முகாம்கள்தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல டெங்கு பாதிப்பு தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது. ஒட்டு மொத்த டெங்கு இறப்புகள் என்பது 2012-ல் 66 இறப்புகளும், 2017-ல் 65 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டு களாக மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிறப்புக்குரிய நடவடிக்கைகள் காரணமாக டெங்கு இறப்புகள் என்பது படிப்படியாக குறைந்திருக்கிறது. தற்போது வரைடெங்கு இறப்பு 7 என்கின்ற வகையில் இருக்கின்றது. இந்த 7 இறப்புகளும்குறித்த காலத்தில் மருத்துவர்களை அணுகாமல் இருந்திருப்பது, காய்ச்சல் வந்த பிறகு மருத்துவமனைக்கு செல்லாமல் தாங்களே சிகிச்சைகள் செய்திருப்பது போன்ற காரணங்களினால் தான் 7 இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது.அந்தவகையில் பொது மக்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் வேண்டு கோள். காய்ச்சிய நீரையே பருக வேண்டும் , வீடுகளை ஒட்டிமழைநீர் தேக்கத்தை சுத்தமாக தவிர்க்க வேண்டும், வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களில் தேங்கி இருக்கின்ற நீரை உலர்த்தி வைக்க வேண்டும், வீடுகளில் குடம் அல்லது தொட்டிகளில் பிடித்து வைக்கப்படும் நீரை துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். இப்படி கொசு உற்பத்தியை பெருக்குவதை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.வருகிற அக்.15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்க ளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் கடந்தஆண்டும் இதே அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டுமருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.அதே போன்று இந்த ஆண்டும் அக்டோபர் 1 5 ஆம் தேதி 1000 இடங்களில் ஒரே நாளில் தமிழகம் முழுவதும், சென்னையில் மட்டும் 100இடங்களிலும் , மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்கள் என்கிறவகையில் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் ” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் மருத்துவ முகாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்






