எடப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நஞ்சுண்டேஸ்வரர் – தேவகிரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் விநாயகர், சுப்பிரமணியர், நஞ்சுண்டேஸ்வரர்- தேவகிரி அம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அரோகரா கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்கள், எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவில் நிலை நிறுத்தப்பட்டன.
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா






