விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 12.10. 2025 விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் இந்திய தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது செருப்பு வீசிய சனாதான சங்கி ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தியும், தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரியும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களின் வாகனத்தை கடந்த7-ம் தேதி உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் சங்கம் முன்பு திட்டமிட்டு சதியில் வழிமறித்து வன்முறை செய்த ரவுடி ராஜீவ் காந்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யக்கோரியம், நெல்லை மேற்கு மாவட்டம் சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய மத்திய பிரதேசத்தை சேர்ந்த வட மாநில இளைஞர் வீரேந்திரன் கைதி மீது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். சேரன்மாதேவி புதிய பேருந்து அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் தளபதி மாதவன் தலைமை, மாநகர மாவட்ட செயலாளர் முத்து வளவன் சேரை நகர துணை செயலாளர் பக்கீர் முகைதீன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் குமரேசன், அம்பை தொகுதி செயலாளர் டேனிஸ், அம்பை ஒன்றிய செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை, ஒன்றிய செய்தி தொடர்பாளர் முகேஷ் வரவேற்புரை, அம்பை ஒன்றை அமைப்பாளர் மாசானம், விகே புரம் நகர அமைப்பாளர் அர்ஜுன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் ஆண்ட்ரூஸ், பத்தமடை நகர செயலாளர் நடராஜன், பத்தமடை நகர அமைப்பாளர் கான்சா முகைதீன், நகர துணை நகர துணை சாமுவேல், சேரை மகளிர் அணி அமைப்பாளர் தாட்சாயினி, வீரை நகர செயலாளர் சௌந்தரராஜன், வீரை நகரத் துணைச். செயலாளர் மணி, வீரை நகர துணை செயலாளர் ஆதிமூலம், அம்பை நகர செயலாளர் கணேசன், அம்பை இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நகர அமைப்பாளர் எஸ் கே ராயல், விகே புரம் நகரத் துணைச் செயலாளர் சுரேஷ், அம்பை ஊடக மையம் மகாராஜா, அம்பை ஒன்றிய பொருளாளர் சட்டநாதன், மாணவர் அணி ஒன்றிய அமைப்பாளர் வருண்,

கோபாலசமுத்திரம் நகர துணை செயலாளர் பசுபதி, நகரத்துறை செயலாளர் மகேஷ், பத்தமடை முகாம் செயலாளர் ராஜு, அம்பை நகர துணை செயலாளர் உதய வளவன், காங்கிரஸ் கவுன்சிலர் ஆனி, மதிமுக ஒன்றிய செயலாளர் குட்டி பாண்டியன், மதிமுக நகர செயலாளர் கணேசன், காருக்குறிச்சி பகுதி செயலாளர் நிஜாந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினார், அதைத் தொடர்ந்து இறுதியாக கவுன்சிலர் பவித்ரா நன்றியுரை ஆற்றினார்.