“மருத்துவ கண்காட்சி மருத்துவ துறையின் முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணர்வு”

மதுரை
21-11-25

தேவதாஸ் மருத்துவமனையின் “மருத்துவ கண்காட்சி மருத்துவ துறையின் முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணர்வு” நடைபெற்றது

தென்தமிழ்நாட்டில் மேம்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் அவசரகால விபத்து சிகிச்சையில் முன்னணி மருத்துவமனை என்று பெயர் பெற்ற தேவதாஸ் மருத்துவமனை, மருத்துவ உலகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மருத்துவ துறையின் முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் ‘மருத்துவ கண்காட்சி” நடைபெற்றது

இந்த மருத்துவ கண்காட்சியில் துணைத்தலைவர் டாக்டர் சதிஷ் தேவதாஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹேமா சதிஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

எலும்பியல்துறையில் முன்னோடியாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ அர்ப்பணிப்புடன் செயல்புரியும் பேராசிரியர் டாக்டர் ஏ. தேவதாஸ் அவர்களின் வலுவான மருத்துவ திறனை அடித்தளமாக கொண்டு நிறுவப்பட்ட தேவதாஸ் மருத்துவமனை, இன்று மிகவும் மதிக்கப்படும் மூன்றாம் நிலை பரிந்துரை மையமாக வளர்ந்துள்ளது. கருணையுடன் கூடிய சேவை உயர்தர மருத்துவ நிபுணத்துவம், சமூக ஆரோக்கியத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக இந்த நிறுவனம் இன்றும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சதிஷ்தேவதாஸ் அவர்கள் கூறியதாவது

“மருத்துவ அறிவியல் எவ்வளவு வேகமாக முன்னேறுகிறது என்பதையும், பொதுமக்கள் மருத்துவ அமைப்பின் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த கண்காட்சி மூலம் உறுதியான முறையில் வெளிப்படுத்த விரும்புகிறோம். மருத்துவ அறிவை அனைவருக்கும் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார்

அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் ஹேமா சதிஷ் கூறியதாவது:

புதுமையும் இணைத்து சேவையும் செயல்படுவதே தேவதாஸ் மருத்துவமனையின் அடிப்படை மதிப்புரிமை. இன்று நோயாளி பராமரிப்பை மாற்றும் முன்னேற்றங்களை மக்களுடன் இணைக்கும் ஒரு முயற்சி தான் இந்த மெடிக்கல் எக்ஸ்போ என்று தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்று, நவீன மருத்துவ முன்னேற்றங்கள் எப்படி மனித வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகின்றன மற்றும் உயிர்களை காப்பாற்றுகின்றன என்பதை நேரடியாக அறிந்து கொண்டனர்

*பாலகிருஷ்ணன்
மதுரை மாவட்ட செய்தியாளர்*